< Back
மாநில செய்திகள்
குறுவட்ட அளவிலான தடகள போட்டி
கரூர்
மாநில செய்திகள்

குறுவட்ட அளவிலான தடகள போட்டி

தினத்தந்தி
|
20 Sept 2022 12:15 AM IST

குறுவட்ட அளவிலான தடகள போட்டியில் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது.

சாம்பியன்

குளித்தலை குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் ஆர்.டி.மலை அரசு மேல்நிலை் பள்ளியில் கடந்த 17-ந்தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் குளித்தலை குறுவட்ட பகுதியிலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் பங்கேற்ற குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் கிருத்திகா, ஹரிணி, கோபிகா, லோகேஸ்வரி, மகேஸ்வரி, சுவாதி, அசின், ஷாலினி, வைஷ்ணவி, மகேஸ்வரி, நளினி, ராஜராஜேஸ்வரி, அகல்யா ஆகியோர் பல்வேறு பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்று குறுவட்ட அளவிலான புள்ளி பட்டியலில் 93 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்கல்வி இயக்குனர் சுகந்தா ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் மஞ்சுளா, சக ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், கட்டிடக்குழு நிர்வாகிகள், மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் பாராட்டினர்.

அரசு கல்லூரிக்கு 26 பதக்கங்கள்

கரூரில் 14,16,18,20 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தடகள போட்டி நடைபெற்றது. இதில் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் 26 பதக்கங்களை பெற்று முதல் இடம் பிடித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். இதையடுத்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை கல்லூரி முதல்வர், உடற்பயிற்சி ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர். இதில் முதல் 2 இடம் பெற்ற தடகள வீரர், வீராங்கனைகள் அடுத்த மாதம் நடைபெறும் மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்