< Back
மாநில செய்திகள்
குறுவட்ட அளவிலான தடகள போட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

குறுவட்ட அளவிலான தடகள போட்டி

தினத்தந்தி
|
2 Sept 2023 12:41 AM IST

கீரமங்கலம் அரசு பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.

அறந்தாங்கி குறுவட்ட அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டி கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஒலிம்பிக் தீபத்தை கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் பாட்ஷா ஏற்றிவைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராசு போட்டிகளை ஆய்வு செய்தார். இதில், ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல் போன்ற பல்வேறு போட்டிகளில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளை உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் நடத்தினார்கள். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் கணேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்