< Back
மாநில செய்திகள்
மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம்- மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மாநில செய்திகள்

மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம்- மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தினத்தந்தி
|
11 Dec 2023 9:48 PM IST

சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரை,

கடந்த சில மாதங்களாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும் போதை டானிக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், போதை மாத்திரைகள் விற்பனை எதிரொலியாக, மதுரையில் உள்ள அனைத்து மெடிக்கல்களிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என மதுரை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்