< Back
மாநில செய்திகள்
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி
திருச்சி
மாநில செய்திகள்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி

தினத்தந்தி
|
8 Oct 2023 1:17 AM IST

திருச்சி சந்தானம் வித்யாலயாவில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

திருச்சி மாவட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி திருச்சி சந்தானம் வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி முதல்வர் பத்மா ஸ்ரீநிவாசன் அனைவரையும் வரவேற்றார். இந்த போட்டி 12, 15, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு 3 பிரிவுகளில் நடைபெற்றது. இதில் 12 பள்ளிகளில் இருந்து 120 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். 12 வயதுக்குட்பட்ட பிரிவில் ஸ்ரீ வாகீஷா வித்யாஸ்ரம் பள்ளி முதலிடம் பிடித்தது. 2-வது இடத்தை சந்தானம் வித்யாலயா பள்ளி பெற்றது. 15 வயதுக்குட்பட்ட பிரிவில் முதல் இடத்தை சந்தானம் வித்யாலயா பள்ளியும், 2-வது இடத்தை காவேரி குளோபல் பள்ளியும், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் முதல் இடத்தை ஆர்.எஸ்.கே. பள்ளியும், 2-வது இடத்தை கேர் இன்டர் நேஷனல் பள்ளியும் பிடித்தது. இதையடுத்து, சந்தானம் குழு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்