< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
சிட்டுக்குருவிகளுக்காக 25 கூண்டுகள் பொருத்தம்
|11 Jun 2022 8:40 PM IST
சிட்டுக்குருவிகளுக்காக 25 கூண்டுகள் பொருத்தப்பட்டது.
நாகூர்:-
நாகை நகராட்சிக்கு சொந்தமான நாகூர் நுண்ணுயிர் உர கிடங்கில் நேற்று சிட்டுக்குருவிகளுக்காக 25 கூண்டுகள் பொருத்தப்பட்டன. இந்த கூண்டுகள் பொருத்தும் நிகழ்ச்சியை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை நகரசபை உறுப்பினர் தியாகு செய்து இருந்தார். நிகழ்ச்சியில் தேசிய பசுமைப் படை மாவட்ட தலைவர் முத்தமிழ் ஆனந்தன், சித்திக், அறுபடை பசுமை சிறகுகள் அமைப்பு நிர்வாகிகள் ராஜசரவணன், பண்டரிநாதன், அழகேசன், சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.