< Back
மாநில செய்திகள்
காவிரி விவகாரம்: சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு!
மாநில செய்திகள்

காவிரி விவகாரம்: சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு!

தினத்தந்தி
|
12 Oct 2023 11:25 AM IST

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை,

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானம் தொடர்பாக சட்டசபையில் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து காவிரி நீர் விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சட்டப்பேரவைச் செயலகம் மூலம் தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன்பின் தீர்மானம் மத்திய அரசுக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்