< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
காவிரி விவகாரம்; கூட்டணி அரசியலுக்காக தி.மு.க. அரசு அமைதி காக்கிறது - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
|1 May 2024 9:43 PM IST
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை தி.மு.க. அரசு வற்புறுத்துவதே கிடையாது என ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,
காவிரி விவகாரம் குறித்து தமிழக முதல்-அமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சரும் கர்நாடக அரசை வற்புறுத்துவதே கிடையாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசின் முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரியும் அடிக்கடி கூறி வருவது, தமிழக விவசாயிகளின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.
தமிழகத்தில் கூட்டணி அரசியல் மற்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக தி.மு.க. அரசின் முதல்-அமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சரும் காவிரி விவகாரம் குறித்து கர்நாடக அரசை வற்புறுத்துவதே கிடையாது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.