காவிரி விவகாரம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - ஜி.கே.வாசன்
|காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என த.மா.கா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை,
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் படி காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகின்றது. இதற்கு கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களை கன்னட அமைப்புகள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனிடம் கேட்ட போது, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உருவாக்கப்பட்டு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடகா இந்த இரு அமைப்புகளையும் மதிக்கவில்லை.
எனவே தமிழக முதல்வர் விவசாய வர்க்கத்திற்கு துரோகம் செய்யாமல் கர்நாடகா முதல்வருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரையில் இரு கட்சிகளுக்கு நலம்விரும்பி கட்சியாக உள்ளது எனக் கூறியுள்ளேன். எனவே தேர்தலுக்கு 7 மாதங்கள் இருப்பதால் தேர்தல் களபணிகளை வலுப்படுத்த உள்ளதாக, அவர் கூறினார்.