< Back
மாநில செய்திகள்
காவிரி விவகாரம்; அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசின் பின்னால் நிற்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
மாநில செய்திகள்

'காவிரி விவகாரம்; அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசின் பின்னால் நிற்க வேண்டும்' - வைகோ வலியுறுத்தல்

தினத்தந்தி
|
1 May 2024 2:38 PM IST

கர்நாடக அரசின் போக்கை தடுத்து நிறுத்த தமிழக அரசும், எதிர்கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் போக்கை தடுத்து நிறுத்துவதற்காக தமிழக அரசும், எதிர்கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும். காவிரி பிரச்சினையில் ஆபத்து நம் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சரும், தமிழக அரசும் பிரச்சினைக்கு இடம் கொடுக்காமல் தடுத்து நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். அப்படி ஒரு அழைப்பு விடுக்கப்பட்டால், அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசின் பின்னால் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்