நாமக்கல்
வேலகவுண்டம்பட்டி அருகேகுடிசையில் திடீர் தீப்பிடித்தது
|பரமத்திவேலூர்
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள செங்கரப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 40). இவர் சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஒரு கல்குவாரியில் வேலை செய்து கொண்டு அவ்வப்போது கெங்காரப்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கருப்புசாமி வீட்டில் மீன் பொறிக்க அடுப்பை பற்ற வைத்து எண்ணெயை ஊற்றிவிட்டு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அடுப்பில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் திடீரென தீப்பிடித்து குடிசை வீட்டின் மேற்கூரையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த நாமக்கல் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.