< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள்; நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
|12 March 2023 5:50 PM IST
சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள் மீது நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழைய மாமல்லபுரம் சாலை நாவலூர்- செம்மஞ்சேரி இடையே அதிகாலை வேளைகளில் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால் அதிகாலை வேளைகளில் வாகனங்களில் வருவோர் ஒதுங்கி செல்லும்போது திடீரென மாடுகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்துக்கு உள்ளாகும் சூழ்நிலையும், விபத்துகள் உண்டாகும் நிலையும் உள்ளது. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.