திருவள்ளூர்
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள்; பிடித்து அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
|போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர்- பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் அகரம், புதுமாவிலங்கை பகுதியில் சாலையின் நடுவே தினமும் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் சுற்றி திரிகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். திடீரென மாடுகள் சாலையின் குறுக்கே ஓடுவதால் மோட்டார் சைக்கிளில் செல்வர்கள் அதன் மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சில நேரங்களில் கால்நடைகளும் விபத்தில் காயமடைகிறது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சாலையில் கால்நடைகளை திரிய விட்டால் அபராதம் விதிக்கப்படும், கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது கவலையளிக்கிறது. எனவே கடம்பத்தூர்- பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் அகரம் மற்றும் புதுமாவிலங்கை பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக சாலையில் படுத்து ஓய்வெடுக்கும் கால்நடைகளை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.