< Back
மாநில செய்திகள்
சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகள் அகற்றப்படுமா? வாகன ஓட்டிகள் கோரிக்கை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகள் அகற்றப்படுமா? வாகன ஓட்டிகள் கோரிக்கை

தினத்தந்தி
|
6 Nov 2022 6:51 PM IST

போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிதிரியும் கால்நடைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை வரை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகர், பூண்டி போன்ற பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் ஆங்காங்கே படுத்து ஓய்வு எடுக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கால்நடைகள் சாலையில் படுத்து ஓய்வெடுப்பதால் வாகன ஓட்டிகள் கால்நடைகளின் மீது மோதி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்கள் அரங்கேறுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகளை சாலைகளில் திரிய விட்டால் கால்நடைகளை பறிமுதல் செய்து அவற்றை அருகில் உள்ள கோ சாலைகளில் ஒப்படைத்து கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், பொதுமக்கள் சாலைகளில் கால்நடை திரிய விட வேண்டாம் என எச்சரித்தார். இருப்பினும் கலெக்டர் உத்தரவை மீறி இது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிதிரியும் கால்நடைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்