< Back
மாநில செய்திகள்
தரமணியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
சென்னை
மாநில செய்திகள்

தரமணியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
17 July 2023 8:57 AM GMT

குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பதை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார்.

குடிநீரில் கழிவுநீர் கலப்பு

பெரம்பலூர் மாவட்டம் மேல்புலியூரைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 44). இவர், வேளச்சேரி விஜயநகர் பஸ் நிலையம் அருகே தங்கி கூலி வேலை செய்து வந்தார். தரமணியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக வந்த புகாரின்பேரில் அதை சரி செய்யும் பணியில் கடந்த 2 நாட்களாக பழனிசாமி ஈடுபட்டு வந்தார். சுமார் 9 அடி ஆழத்தில் இறங்கி அவர் வேலை செய்து கொண்டு இருந்தார்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது பள்ளத்தில் இருந்த கழிவுநீர் அகற்றும் மோட்டாரை கயிறு மூலம் மேலே தூக்கிய போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமி, மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது கழிவுநீரில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் இவரை பணியில் அமர்த்திய ஒப்பந்ததாரரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்