< Back
மாநில செய்திகள்
சாதிவாரி கணக்கெடுப்பு கருத்தரங்கம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு கருத்தரங்கம்

தினத்தந்தி
|
19 Oct 2023 12:18 AM IST

காங்கிரஸ் கட்சி சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் நெல்லை மாவட்ட ஓ.பி.சி. பிரிவு சார்பில், "சாதிவாரி கணக்கெடுப்பில் அவசியமும், முக்கியத்துவமும்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், ஓ.பி.சி. பிரிவு மாநில தலைவர் நவீன், பொதுச்செயலாளர் மோகன் நாயுடு ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி பேசினார்கள்.

கருத்தரங்கில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத்தலைவர் நித்யபிரியா ரவி, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஓ.பி.சி.பிரிவு மாநிலத்தலைவர் நவீன் நிருபர்களிடம் கூறுகையில், "சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசும், மத்திய அரசும் உடனே நடத்தி அதில் உள்ள அனைத்து சாதியினருக்கும் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுபோல் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமல்படுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார்" என்றார்.

மேலும் செய்திகள்