< Back
மாநில செய்திகள்
இலவச சைக்கிள் இருக்கையில் சாதி பெயர் குறியீடு: மாணவர்கள் இடையே அதிருப்தி - சர்ச்சை..!
மாநில செய்திகள்

இலவச சைக்கிள் இருக்கையில் சாதி பெயர் குறியீடு: மாணவர்கள் இடையே அதிருப்தி - சர்ச்சை..!

தினத்தந்தி
|
13 Sept 2022 9:17 PM IST

கிருஷ்ணகிரியில் இலவச சைக்கிள் இருக்கையில் சாதி பெயர் குறியீடு போடப்பட்டுருந்தது மாணவர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி,

தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளியில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 40 மாணவர்கள் மற்றும் 45 மாணவிகளுக்கு வழங்குவதற்கான இலவச சைக்கிள்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது இலவச சைக்கிள் இருக்கையில் எம்.பி.சி, பி.சி. எஸ்.சி (MBC, BC, SC) என சாக்பீசில் குறியீடு எழுதப்பட்டிருந்தது மாணவர்களுக்கு இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதில் எஸ்.சி (SC) என எழுதப்பட்டிருந்த சைக்கிள்கள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பள்ளியின் இந்த செயல் மாணவர்களுக்கு இடையே அதிருப்தியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்