மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் தமிழகத்தில் சாதிய மோதல்கள் தலைவிரித்தாடுகிறது - வானதி சீனிவாசன்
|மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் தமிழகத்தில் சாதிய மோதல்கள் தலைவிரித்தாடுகிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே முற்றிய சாதிய வன்முறையானது, தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சாதியை ஒழித்து, சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று ஒவ்வொரு மேடையிலும் முழங்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் தமிழகத்தில் சாதிய மோதல்கள் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
கள்ளங்கபடமில்லாத பள்ளிச் சிறார்களின் மனதில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீ போல் பரவிவரும் சாதிய மோதல்கள், உங்கள் நிர்வாகத்திறனின் இயலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதுதான் நீங்கள் மார்தட்டி முழங்கி வரும் சமூக நீதியா மு.க.ஸ்டாலின், அறிவாலயம்?. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.