< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ்

தினத்தந்தி
|
17 Jun 2023 12:15 AM IST

மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழை பரமக்குடி சப்-கலெக்டர் வழங்கினார்.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா நாராயணபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சாதி சான்றிதழ் கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களில் மாணவ-மாணவிகள் உள்பட 61 பேருக்கு முதல் கட்டமாக சாதி சான்றிதழ்களை பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல் வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர்கள் சப்-கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர். பின்பு அவர்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கமுதி தாசில்தார் சேதுராமன், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் வரதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்