< Back
மாநில செய்திகள்
இருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

இருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்

தினத்தந்தி
|
5 Feb 2023 12:15 AM IST

உளுந்தூர்பேட்டை அருகே இருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் செஞ்சிக்குப்பம் பகுதியில் வசித்து வரும் 21 இருளர் இன குடும்பத்தினர் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சிக்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் யோக ஜோதி தலைமை தாங்கினார். மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பபாளராக கலந்து கொண்டு 21 இருளர் இன குடும்பத்தினருக்கும் சாதி சான்றிதழ்களை வழங்கினார். இதில் தாசில்தார் ராஜு, திருநாவலூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி இளங்கோவன், மண்டல துணை தாசில்தார் அந்தோணிராஜ், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்