திருவண்ணாமலை
பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு
|அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசி -திண்டிவனம் சாலையில் அமைந்துள்ளஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 29-ம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு இளநிலை பட்ட வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரி நிறுவனர் பா.முனிரத்தினம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சீ.ருக்மணி, கல்லூரி செயலாளர் எம்.ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை தலைவர் ஞானமலர் வரவேற்றார்.
மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ஆர்.சரவணன் பேசுகையில், பள்ளியில் இருந்து கல்லூரிக்கு அடியெடுத்து வைத்துள்ள மாணவிகள் தயக்கமின்றி தங்களது சந்தேகங்களை விரிவுரையாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார். மேலும். பெற்றோர்கள் மற்றும் மாணவிகளின் பொறுப்புகள் குறித்து விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் பிளஸ்-2 தேர்வில் 500 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த 36 மாணவிகளுக்கு ரொக்கப்பரிசாக தலா ரூ,5 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கல்லூரி அறக்கட்டளை சார்பில் காசோலைகளாக வழங்கப்பட்டது.
முடிவில் வேதியியல் துறை தலைவர் சோபா நன்றி கூறினார்.