< Back
தமிழக செய்திகள்
வங்கி அதிகாரி போல் நடித்து நூதன முறையில் சிறை காவலரிடம் ரூ.13 ஆயிரம் பணம் அபேஸ்
சென்னை
தமிழக செய்திகள்

வங்கி அதிகாரி போல் நடித்து நூதன முறையில் சிறை காவலரிடம் ரூ.13 ஆயிரம் பணம் 'அபேஸ்'

தினத்தந்தி
|
10 July 2023 2:59 PM IST

வங்கி அதிகாரி போல் நடித்து நூதன முறையில் சிறை காவலரிடம் ரூ.13 ஆயிரம் பண மோசடி செய்த சம்பவம் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த புழல் விசாரணை ஜெயிலில் காவலராக பணிபுரிந்து வருபவர் ஜெயசீலன் (வயது 28). இவர் புழல் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், தான் வங்கி அதிகாரி பேசுவதாகவும், 'உங்கள் வங்கி கணக்கு காலாவதியாகி விட்டது, அதனால் கணக்கை புதுப்பிக்க உங்கள் வங்கி விபரங்களை குறுந்தகவல் மூலம் அனுப்பி வையுங்கள்' என பேசியுள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய ஜெயசீலன் தனது வங்கி கணக்கு எண்ணை குறுந்தகவல் மூலம் சம்பந்தப்பட்ட எண்ணுக்கு அனுப்பி வைத்தார். இதை பயன்படுத்தி அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.13,700 எடுக்கப்பட்டதாக அவருக்கு குறுந்தகவல் வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயசீலன் தான் மோசடியாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, உடனடியாக புழல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். வங்கி அதிகாரி போல் பேசி சிறை காவலரிடமே பண மோசடி செய்த சம்பவம் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்