< Back
மாநில செய்திகள்
குற்றப்பிரிவில் 15 ஆண்டுகளாக முடங்கியுள்ள வழக்குகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

குற்றப்பிரிவில் 15 ஆண்டுகளாக முடங்கியுள்ள வழக்குகள்

தினத்தந்தி
|
28 March 2023 12:59 AM IST

விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் 15 ஆண்டுகளாக விசாரணை நிலையிலேயே முடங்கியுள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் 15 ஆண்டுகளாக விசாரணை நிலையிலேயே முடங்கியுள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரூ.65 லட்சம் மோசடி

விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் செயல்பட்டு வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நீதிமன்றங்களின் உத்தரவின் பேரிலும் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரிலும் மாவட்ட குற்றப்பிரிவில் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.

மாவட்ட குற்றப்பிரிவில் பதிவு செய்யப்படும் பல வழக்குகள் பதிவு நிலையிலேயே முடங்கி விடுகின்றன. தொடர் நடவடிக்கை பெரும்பாலான வழக்குகளில் தாமதமாகிறது. கடந்த 2003-ம் ஆண்டு சிவகாசியில் ஒரு தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 65 லட்சம் மோசடி செய்ததாக தனியார் வங்கி ஊழியர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்குகள் முடக்கம்

இதேபோன்று கடந்த 2004-ம் ஆண்டு விருதுநகரை சேர்ந்த தொழிலதிபரிடம் கடன் பெற்று தருவதாக பல லட்சம் மோசடி செய்த ஒரு கும்பல் மீது மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது புகார் கொடுத்த தொழில் அதிபர் இறந்துவிட்டார்.

இந்தநிலையில் மேற்படி 2 வழக்குகளும் இன்னும் விசாரணை நிலையிலேயே முடங்கி உள்ளது. இது போன்று பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் முடிவுக்கு வராத நிலையில் புகார் கொடுத்தவர்கள் நிவாரணம் கிடைக்காத நிலையில் தவிக்கும் நிலை இருந்து வருகிறது.

எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் மாவட்ட குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்குகளில் புகார்தாரர்களுக்கு தாமதம் இல்லாமல் நிவாரணம் கிடைக்க வழக்கு விசாரணையை துரிதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்