< Back
மாநில செய்திகள்
ஓபிஎஸ், ரவீந்திரநாத் மீதான வழக்குகள் ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

ஓபிஎஸ், ரவீந்திரநாத் மீதான வழக்குகள் ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
27 July 2023 5:59 PM IST

ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும், 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ரவீந்திரநாத்தும் வெற்றி பெற்றிருந்தனர். இந்த நிலையில் வேட்பு மனுவில் அவர்கள் தவறான தகவல்களை தெரிவித்ததாக அதாவது சில தகவல்களை மறைத்ததாக அவர்கள் மீது மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

மிலானி புகார் பற்றி விசாரித்து அறிக்கை தர போலீசுக்கு உத்தரவிட்டதை எதிர்த்து இருவரும் மனுதாக்கல் செய்தனர். இந்த நிலையில் புகார் மனுவுக்கு ஆதரவாக எந்த பிரமாண மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்