< Back
மாநில செய்திகள்
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்குகள் ரத்து - சென்னை ஐகோர்ட்டு
மாநில செய்திகள்

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்குகள் ரத்து - சென்னை ஐகோர்ட்டு

தினத்தந்தி
|
23 Feb 2024 6:32 PM IST

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தேர்தல் பிரசாரத்தின் போது விதிமுறைகளை மீறியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

தமிழக சட்டசபைக்கு 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது விதிகளை மீறியதாக அவர் மீது பெருநாழி மற்றும் கமுதி போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த 2 வழக்குகள் ராமநாதபுரம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், ராஜகண்ணப்பன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான 2 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்