< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரிய வழக்கு: நாளை விசாரணை
|8 Jan 2024 12:44 PM IST
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்த காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு தடை கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது
மதுரை,
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்த காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு தடை கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பது சட்டவிரோதம். போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது.
இதையடுத்து வழக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.