< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி பள்ளி தொடர்பான வழக்கு... பள்ளிக்கல்வி துறைக்கு கல்வியாளர்கள் வேண்டுகோள்
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளி தொடர்பான வழக்கு... பள்ளிக்கல்வி துறைக்கு கல்வியாளர்கள் வேண்டுகோள்

தினத்தந்தி
|
19 Aug 2022 6:55 PM IST

விசாரணை முடியும் வரை சிறப்பு அதிகாரியை நியமனம் செய்து தனியார் பள்ளியை அரசு நிர்வகிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி,

சிறப்பு அதிகாரியை நியமித்து கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியை அரசு நிர்வகிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிகல்வித்துறைக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், பள்ளி நிர்வாகத்தின் கூற்றுகளை ஆய்வு செய்யும் போது, கள்ளக்குறிச்சி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதால், விசாரணை முடியும் வரை சிறப்பு அதிகாரியை நியமனம் செய்து தனியார் பள்ளியை அரசு நிர்வகிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தில், பள்ளிக் கல்வித்துறையின் தாமதப்போக்கும், மெத்தனப்போக்கும் விசாரணையைப் பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ள கல்வியாளர்கள், பள்ளிகளைக் கண்காணிப்பதற்கும், ஒழங்குபடுத்துவதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்