< Back
மாநில செய்திகள்
பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு
மாநில செய்திகள்

பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
19 Jan 2024 12:52 PM IST

சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நீலாங்கரை மகளிர் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

சென்னை,

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில், எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் செர்லினா மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டம், குழந்தைப் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசியது, தாக்கியது, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் பணிபுரிந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நீலாங்கரை மகளிர் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்