< Back
மாநில செய்திகள்
பாஜக பெண் நிர்வாகி மீது தாக்குதல் - அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு
மாநில செய்திகள்

பாஜக பெண் நிர்வாகி மீது தாக்குதல் - அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
24 Jan 2024 8:19 PM IST

அமர்பிரசாத் ரெட்டி அவரது கார் டிரைவர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமர்பிரசாத் ரெட்டி அவரது கார் டிரைவர் ஸ்ரீதர், நிவேதா மற்றும் கஸ்தூரி ஆகிய 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி நுழைந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்