ஈரோடு
பெண்ணிடம் நகை பறித்த வழக்கு: முதியவர் உள்பட 2 பேர் கைது
|பெண்ணிடம் நகை பறித்த வழக்கு: முதியவர் உள்பட 2 பேர் கைது
சோலார்
ஈரோடு கதிரம்பட்டி நஞ்சனாபுரம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ். அவருடைய மனைவி கமலா (வயது54). இவர் சம்பவத்தன்று நஞ்சனாபுரம் செல்லும் சாலையில் உள்ள தங்கம் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் 2 பவுன் நகையை பறித்துவிட்டு் தப்பித்து சென்றனர்.
இதுகுறித்து கமலா ஈரோடு தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான மோட்டார்சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மடத்துக்குளத்தை சேர்ந்த அப்பாதுரை மகன் சூர்யா என்ற ஜெகதீஷ் (27), திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதிபாளையம் நாராயணன் நகரை சேர்ந்த செல்வராஜ் (60) உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஈரோடு தாலுகா போலீசார் சூர்யா, செல்வராஜை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 பவுன் நகை மற்றும் மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.