< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு
|10 Aug 2024 11:10 AM IST
அவசர வழக்காக பட்டியலிடுமாறு சுப்ரீம்கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் ஆகஸ்ட் 30ந் தேதி மற்றும் செப்டம்பர் 1ந் தேதியில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில், கார் பந்தயத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரச வழக்காக பட்டியலிடுமாறும் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.