< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 69 பேர் மீது வழக்கு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 69 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
26 Oct 2022 1:30 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின் போது அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 69 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது.

மேலும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண் ஆகியோர் மாசற்ற தீபாவளி கொண்டாட பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடித்து பசுமை தீபாவளி கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது திருவள்ளூர், கடம்பத்தூர், மணவாளநகர், மப்பேடு, புல்லரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், வெங்கல், திருத்தணி, திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, திருப்பாலைவனம், கும்மிடிப்பூண்டி, சிப்காட், ஆரம்பாக்கம், கவரப்பேட்டை, பாதிரிவேடு என பல்வேறு பகுதிகளில் அனுமதி அளித்த நேரத்தை விட கூடுதல் நேரத்தில் பட்டாசுகளை வெடித்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 69 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்