< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு வளாகம் அருகே டிரோன் கேமரா பறக்கவிட்ட 3 பேர் மீது வழக்கு
|20 March 2023 11:38 AM IST
சென்னை ஐகோர்ட்டு வளாகம் அருகே டிரோன் கேமரா பறக்கவிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் எச்சரித்து போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
சென்னை ஐகோர்ட்டு வளாகம் அருகே என்.எஸ்.சி. போஸ் ரோடு ஆவின் பாலகம் அருகே நேற்று திடீரென டிரோன் கேமரா பறப்பதை பார்த்த ஐகோர்ட்டு பாதுகாப்பு பிரிவு போலீசார், இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் எஸ்பிளனேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று டிரோன் கேமராவை பறக்க விட்ட சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த வித்யாசாகர் (வயது 27), விக்னேஸ்வரன் (30), கொருக்குப்பேட்டையை சேர்ந்த சூர்யா (30) ஆகிய 3 பேரையும் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் அனுமதி இன்றி டிரோன் கேமராவை பறக்கவிட்டு படம் பிடித்தது தெரிந்தது. 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் எச்சரித்து போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.