< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
டிராக்டரில் மணல் அள்ளிய 2 பேர் மீது வழக்கு
|21 Jun 2023 12:26 AM IST
டிராக்டரில் மணல் அள்ளிய 2 பேர் மீது வழக்கு
திருப்புவனம்
பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்த படமாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அரசனூர் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன்(வயது23), இவரது தந்தை அய்யாவு (54) ஆகிய இருவரும் அரசனூர் அருகே உள்ள உப்பாற்றில் இருந்து அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் அள்ளி வந்துள்ளனர். மணல் ஏற்றி வந்த தந்தை, மகன் இருவரையும் பூவந்தி போலீசில் ஒப்படைத்து புகார் செய்யப்பட்டது.
புகாரின்பேரில் பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் மற்றும் போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிந்து கைதுசெய்தும், மணல் அள்ளி வந்த டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.