< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தேனி அருகே மனைவியை தாக்கிய தொழிலாளி மீது போலீசார் வழக்கு
|2 Nov 2022 10:57 PM IST
தேனி அருகே மனைவியை தாக்கிய தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி அருகே அரண்மனைப்புதூரை சேர்ந்தவர் துக்கராஜா (வயது 35). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வைதீஸ்வரி (29). இவர்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்து வைத்தனர்.
இந்தநிலையில் துக்கராஜா மதுபோதையில் தனது மனைவியிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த வைதீஸ்வரி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் துக்கராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.