< Back
மாநில செய்திகள்
சென்னை ஜெயின் கோயில் அருகே உள்ள இறைச்சி கடையை அகற்றக் கோரிய வழக்கு வாபஸ்...
மாநில செய்திகள்

சென்னை ஜெயின் கோயில் அருகே உள்ள இறைச்சி கடையை அகற்றக் கோரிய வழக்கு வாபஸ்...

தினத்தந்தி
|
14 March 2024 5:41 PM IST

மாநகராட்சி அதிகாரிகளை அணுகுவதாக கூறிய, மனுதாரர் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

சென்னை,

சென்னை சூளை பகுதியில் உள்ள ஜெயின் கோவில் அருகே நடத்தப்படும் இறைச்சிக் கடையை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆகியவற்றிற்கு உத்தரவிடக் கோரி, கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீ அகில பாரதிய சுத் ஹர்ம் ஜெயின் சன்ஸ்க்ருதி ரக்ஷக் அறக்கட்டளை சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு , கோவில் அருகில் இறைச்சிக் கடை அமைக்கக் கூடாது என எந்த சட்டமோ, விதிகளோ இல்லாதபோது கோர்ட்டு எப்படி உத்தரவிடமுடியும் என கேள்வி எழுப்பியது

இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை அணுகுவதாக கூறிய, மனுதாரர் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதனையடுத்து ஐகோர்ட்டு இந்த மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும் செய்திகள்