< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
காம்பவுண்டு சுவரை இடித்தவர்கள் மீது வழக்கு
|25 Dec 2022 12:15 AM IST
சங்கரன்கோவிலில் காம்பவுண்டு சுவரை இடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில்-திருவேங்கடம் சாலையை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 53). இவருக்கும், அவரது பெரியப்பா பாலசுப்பிரமணியன் குடும்பத்திற்கும் சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
லட்சுமணன் தனக்கு சொந்தமான நிலத்தை காம்பவுண்டு சுவர் கட்டி பராமரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பாலசுப்பிரமணியனின் மகன்கள் மீனாட்சி, முத்து கார்த்திகேயன் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த கணேசன் உள்ளிட்டவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் காம்பவுண்டு சுவரை இடித்து, சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லட்சுமணன் அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.