< Back
மாநில செய்திகள்
போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு

தினத்தந்தி
|
13 April 2023 10:32 PM IST

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திண்டுக்கல் அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்தவர் காடு என்ற அன்பழகன் (வயது 21). இவர், 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறுமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அன்பழகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொன்மாந்துறையை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் அன்பழகன் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்