< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
|27 Jun 2022 3:22 PM IST
வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத் துறை, மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
சென்னை,
மாநகராட்சிகளின் டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது. மேலும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத் துறை, மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.