< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
புதுப்பாளையம் கிராமத்தில் புதுப்பாளையம்ர் மீது வழக்கு - 1,000 பாட்டில்கள் பறிமுதல்
|6 April 2023 12:53 PM IST
புதுப்பாளையம் கிராமத்தில் மது விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றின் அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதையடுத்து நேற்று முன்தினம் ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது புதுப்பாளையம் ஆரணி ஆற்றின் அருகே ஒருவர் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அவர் தப்பி ஓடி விட்டார். விசாாணையில் அவர் பனையஞ்சேரியைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 35) என்பது தெரிய வந்தது. மேலும் ஆனந்தன் திருட்டுத்தனமாக விற்க வைத்திருந்த 1,020 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.