< Back
மாநில செய்திகள்
இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு
தேனி
மாநில செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு

தினத்தந்தி
|
22 Sept 2023 5:30 AM IST

இஸ்லாமிய நல கூட்டமைப்பின் பொருளாளர் உஸ்மான் அலி அளித்த புகாரின்பேரில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இஸ்லாமிய நல கூட்டமைப்பின் பொருளாளர் உஸ்மான் அலி பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், பெரியகுளத்தில் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது இந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் பாலன், பாரதீய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் சட்டவிரோதமாக மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் பாலன், ராஜபாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்