விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
|சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, மேல்மா பகுதியில், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த சில மாதங்களாக அறப்போராட்டம் நடத்தி வந்த நிலையில், அந்த அறப்போராட்டத்தை அடக்கும் விதமாக விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின்மீது தி.மு.க. அரசு வழக்கு தொடுத்து, அவர்களை கைது செய்திருக்கிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
இது தொடர்பாக விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்றும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.