< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு
|12 Oct 2023 4:45 AM IST
மனைவியை தாக்கிய முன்னாள் ராணுவ வீரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி பாரஸ்ட்ரோடு 5-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி சீராயி (வயது 55). முருகேசன் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்று தேனியில் உள்ள ஒரு பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு தொடரப்பட்டது. பின்னர் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சில நாட்களுக்கு முன்பு ஜீவனாம்சம் பெறுவதற்காக சீராயி தனது கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரிடம் முருகேசன் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த சீராயி கொடுத்த புகாரின் பேரில் முருகேசன் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.