< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
|4 Jan 2024 6:31 AM IST
பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கில், ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு கடந்த ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டதால் முதல் பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிரான மனுவை நிலுவையில் வைக்க வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்த ஐகோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்தது .