< Back
மாநில செய்திகள்
தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
தேனி
மாநில செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
11 May 2023 12:30 AM IST

தேனி அருகே கோவில் திருவிழாவில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி அருகே மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ் (வயது 26). இவர் பொம்மையகவுண்டன்பட்டியில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய ஊரில் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவை விக்னேஷ் தனது சித்தப்பா மகன் தினேஷ்குமாருடன் சேர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சிலர் விக்னேஷிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். அதே பகுதியில் கிடந்த இரும்பு கம்பியால் தாக்கியதில் விக்னேஷ் பலத்த காயம் அடைந்தார். அதை தடுக்க முயன்ற தினேஷ்குமாரையும் தாக்கினர்.

காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து விக்னேஷ் பழனிசெட்டிபட்டி போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில், அதே ஊரைச் சேர்ந்த சமுத்திரம் மகன் முருகன் (20), பல்பாண்டி மகன் ஜெயபிரகாஷ் (20), பிச்சைப்பாண்டி (23), மனோஜ் (27), விக்கி (25), பாண்டீஸ்வரன் (26), வண்டிகாரன் (57) ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்