< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 7 பேர் மீது வழக்கு
|12 May 2023 12:30 AM IST
பள்ளிபாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திபாளையம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடிய பள்ளிபாளையம், ஆவத்திபாளையத்தை சேர்ந்த 7 பேரை பிடித்தனர். பின்னர் அவர்கள் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ரூ.2,050 பறிமுதல் செய்யப்பட்டது.