நாமக்கல்
சேவலை வைத்து சூதாட்டம்; 7 பேர் மீது வழக்குப்பதிவு
|மோகனூரில் சேவலை வைத்து சூதாட்டம் நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மோகனூர்
மோகனூர் அடுத்துள்ள பேட்டப்பாளையம், ஊராட்சிக்கு உட்பட்ட மணியங்காளிபட்டி பகுதியில் சேவலை வைத்து சூதாட்டம் நடத்தியதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மோகனூர் சப்-இன்ஸ்பெக்டர், ஜவஹர் மற்றும் போலீசார் மணியகாளிப்பட்டி பகுதியில் தீவிர சோதனை செய்தனர். அப்போது புதுகாலனி அருகே சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது. அப்போது போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் மணியகாளிப்பட்டி புது காலனி பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 28), அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். அதேபோல் மோகனூர் அடுத்துள்ள வலையபட்டி கஸ்தூரி மலை அருகே சேவலை வைத்து சூதாட்டம் நடப்பதாக மோகனூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்ற, எருமப்பட்டியை சேர்ந்த ஆகாஷ் (20), கரூர் மாவட்டம், நெரூர் ஒத்தக்கடையை சேர்ந்த கார்த்திக் (35), கரூர் மாவட்டம் மண்மங்கலம் மறவாபாளையத்தை சேர்ந்த மகேஸ்வரன் (26), வலையபட்டி சேர்ந்த கார்த்திக் (27), ஜம்புமடைய சேர்ந்த மகேஸ்வரன் (29) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.