திருநெல்வேலி
நகைக்கடையை சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்கு
|நகைக்கடையை சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் மெயின் பஜாரில் சண்முகம் என்ற சான் (வயது 44) என்பவருக்கு சொந்தமான இடத்தில் நாகராஜன் (40) நகைக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு இடையே கடை வாடகை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து நாகராஜன் வள்ளியூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் சண்முகம், அவருடைய தம்பி மகேஷ் (40), உறவினர்களான ரவி (40), முத்துபாண்டியன் (35), திருமலைநம்பி, சுடலைக்கண் ஆகிய 6 பேரும் நாகராஜனின் நகைக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த கண்ணாடி ஷோகேஸ் பெட்டிகளை உடைத்து சேதப்படுத்தி, அதில் இருந்த நகைகளை திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற நாகராஜனை சண்முகம் உள்ளிட்ட 6 பேரும் அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், சண்முகம் உள்ளிட்ட 6 பேர் மீது வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.