< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
நிலத்தகராறில் 6 பேர் மீது வழக்கு
|2 Jun 2022 9:29 PM IST
போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே விக்கனாம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (28). உறவினர்கள். இவர்களுக்குள் நில பிரச்சினை இருந்தது. கடந்த 31-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் தங்கராஜ் தாக்கப்பட்டார். இதுகுறித்து தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் பிரதாப் (28), அமுதா (45) ஆகிய 2 பேர் மீது போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதே போல பிரதாப் கொடுத்த புகாரின் பேரில் தங்கராஜ் (32), மணி (36), விவேகா (22), அபிராமி (25) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.