< Back
மாநில செய்திகள்
விவசாயியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

விவசாயியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
7 Feb 2023 12:30 AM IST

திண்டுக்கல் அருகே தோட்டத்தில் ஆடு மேய்ந்ததால் ஏற்பட்ட தகராறில் விவசாயியை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திண்டுக்கல் அருகே உள்ள கம்பிளியம்பட்டி ஆண்டியபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி ஆறுமுகம் வளர்த்த ஆடு ஒன்று அதே பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (31) என்பவரது தோட்டத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பார்த்தசாரதி தனது உறவினர்களுடன் சேர்ந்து ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து ஆறுமுகத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆறுமுகம் வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பார்த்தசாரதி மற்றும் அவரது உறவினர்கள் சண்முகம் (50), நாகராஜ் (27), வேல்முருகன் (22), தமிழ் மாசாணம் (20) ஆகிய 5 பேர் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்