< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
பெண் போலீஸ் உள்பட 5 பேர் மீது வழக்கு
|17 Nov 2022 9:14 PM IST
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, பெண் போலீஸ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலக்கோட்டை அருகே உள்ள மேலக்கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி. அவருடைய மகன் அழகுராஜ் (வயது 35). இவர், திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி லீலாவதி (32). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் லீலாவதி புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் தனது கணவர் அழகுராஜ், மாமனார் முத்துச்சாமி, மாமியார் ஜோதி, அழகுராஜின் தங்கைகள் ராக்கு, நாகலட்சுமி ஆகியோர் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் 5 பேர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதில் நாகலட்சுமி, விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.